Breaking News

பெண் அமீர்கான்; வித்யாபாலன் !!

பாலிவுட்டின் திறமையான தேசிய விருது பெற்ற நடிகை வித்யாபாலன். எப்படிப்பட்ட ரோலாக இருந்தாலும் அதில் சிறப்பாக நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்று விடுவார். தற்போது கஹானி படத்தின் இரண்டாம்பாகமான கஹானி-2வில் நடித்திருக்கிறார். இதன் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. அப்போது சிலர், வித்யாபாலனை பெண் அமீர்கான் என்று உயர்த்தி பேசினார்கள்.

இதற்கு பதிலளித்த வித்யாபாலன்... ‛‛அமீர்கானின் படங்கள் போன்று என்னுடைய படங்களும் நல்ல வசூலை குவித்து வருகிறது. இதனால், என்னை சிலர் பெண் அமீர்கான் என்று அழைக்கிறார்கள், இதை எனக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவமாக நினைக்கிறேன். அமீர்கான், படங்கள் பற்றியும், அதன் வியாபாரம் பற்றியும் நன்கு தெரிந்து வைத்திருப்பவர். அவர் ஒரு ‛மார்க்கெட்டிங் கிங்' என்று சொல்லலாம். அவருடன் நான் பணியாற்றியது கிடையாது, அவரைப்போன்று வர வேண்டும் என்றால் இன்னும் நான் வெகுதூரம் பயணிக்க வேண்டும் என்று நினைக்கிறேன்'' என கூறியுள்ளார்.