Breaking News

டெண்டுல்கர் வாங்கிய அதிநவீன BMW கார் !

பிஎம்டபிள்யூ பிரியரான கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது கராஜில் பல பிஎம்டபிள்யூ மாடல்களை வரிசை கட்டி நிறுத்தி வைத்துள்ளார். இதுபற்றி பல செய்திகளை டிரைவ்ஸ்பார்க் தளம் வழங்கியிருக்கிறது. கடைசியாக உலகின் அதிசிறந்த ஹைபிரிட் ஸ்போர்ட்ஸ் கார் மாலான பிஎம்டபிள்யூ ஐ8 காரை சச்சின் டெண்டுல்கர் வாங்கினார்.

இந்தியாவில் வெகு சொற்ப எண்ணிக்கையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட இந்த காரை அறிமுகம் செய்த கையோடு முதல் ஆளாக பதிவு செய்து டெலிவிரி பெற்றார். அத்துடன், அந்த காரை சமீபத்தில் தனது டேஸ்ட்டுக்க தகுந்தவாறு வண்ணத்தை மாற்றி கஸ்டமைஸ் செய்துள்ளார்.

அடுத்து ஒரு பிஎம்டபிள்யூ கார் வாங்கிய சச்சின் டெண்டுல்கர்!

இந்தநிலையில், இந்த ஆண்டில் இரண்டாவது புதிய பிஎம்டபிள்யூ காரை சச்சின் வாங்கியிருக்கிறார். தற்போது வாங்கியிருக்கும் மாடல் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் புதிய தலைமுறை 7 சீரிஸ் சொகுசு கார். இந்த காரை தனது விருப்பத்திற்கு ஏற்ப பல விசேஷ ஆக்சஸெரீகளுடன் கஸ்டமைஸ் செய்து வாங்கியிருக்கிறார்.