Breaking News

மாலை நேர ஸ்நாக்ஸ் சிக்கன் சமோசா

தேவையான பொருட்கள்: 

சிக்கன்  - 300 கிராம், 
பச்சை மிளகாய் - 4, 
வெங்காயம் - 250 கிராம், 
இஞ்சி, பூண்டு விழுது - அரை ஸ்பூன்
கிராம்பு - 6 
மைதா - 350 கிராம்
பேக்கிங் பவுடர் - 2 தேக்கரண்டி
நெய் - 3 தேக்கரண்டி
கரம் மசாலா - தேக்கரண்டி
கொத்துமல்லி - சிறிதளவு, 
உப்பு, எண்ணெய் - தேவைக்கு

செய்முறை: 

* ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை போட்டு அதனுடன் பேக்கிங் பவுடரை கலந்து தேவையான உப்புடன் தேவையான தண்ணீர், நெய் சேர்த்து கெட்டியாக பிசைந்து 2 மணி நேரம் ஊற வைக்கவும். 

* சிக்கனை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி வைக்கவும். 

* வெங்காயம், பச்சை மிளகாய், கொத்துமல்லி ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். 

* கடாயை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி, கிராம்பு போட்டு தாளித்த பின் நறுக்கிய வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, ப.மிளகாய், தக்காளியை போட்டு நன்றாக வதக்கிய பின்னர் சிக்கன் கொத்துக்கறியை சேர்த்து வதக்கவும். 

* சிக்கன் வெந்ததும் உப்பு, கரம்மசாலா தூள் சேர்க்கவும். நல்ல மணம் வந்ததும் இறக்கி ஆற வைக்கவும். 

* பிசைந்து வைத்துள்ள மாவை உருண்டைகளாக பிடித்து வட்டமாக தேய்த்து கொள்ளவும். வட்டங்களை முக்கோண வடிவமாக செய்து சிக்கன் கலவையை வைத்து ஓரங்களில் மூடவும். 

* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சமோசாவை போட்டு பொரித்தெடுக்கவும். 

* சுவையான சிக்கன் சமோசா ரெடி.