Breaking News

ஒபாமாவின் மனைவியை ‘கொரில்லா’ என பதிவிட்ட ஆசிரியை பணி நிறுத்தம் !

அமெரிக்காவின் ஜார்ஜியா பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் கடந்த 1989-ம் ஆண்டிலிருந்து ஆசிரியையாக பணிபுரிந்து வருபவர் ஜேன் உட் அல்லன். இவர், அதிபர் ஒபாமாவின் மனைவி மிச்செல் ஒபாமாவை ‘கொரில்லா’ என தனது பேஸ்புக் பக்கத்தில் பதிந்துள்ளதாக பிரச்னை எழுந்தது.

இந்நிலையில், ஜேன் உட் அல்லன் வெளியிட்டுள்ள பேஸ்புக் பதிவில், ‘இந்த பாவமான கொரில்லா, அதிபர் மாளிகையை விட்டு வெளியே வந்து எப்படி இந்த உலகில் வாழப்போகிறதோ…?

இனி, அவரின் உல்லாச சுற்றுலாக்களுக்கும், தனது அழகை பராமரிக்கவும் அரசு பணத்தை செலவிட முடியாதும் என்றும் குறிப்பாக கூந்தல் பாதுகாப்பதில் அவர் கவனம் செலுத்தவேண்டியிருக்கும் எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதனையடுத்து, அந்த ஆசிரியை இனவெறியை கருத்தில் கொண்டு இந்த பதின் கருத்து வெளியிட்டதாகக் கூறி பள்ளி நிர்வாகம் அவரை ஆசிரியை பணியிலிருந்து நீக்கியுள்ளது.



மேலும், இனவாதம் மற்றும் பாரபட்சத்தை ஒருபோதும் பள்ளி நிர்வாகம் ஏற்றுக்கொள்ளாது எனவும் இது பள்ளியில் பணியாற்றும் மற்ற ஆசிரியர்களுக்கும் பொருந்தும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.