Breaking News

தோனியின் வாழ்க்கை பற்றிய திரைப்படம் உலகளவில் சுமார் ரூ.200 கோடி வசூல் !

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தல தோனியின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட ”எம்.எஸ். தோனி – தி அன்டோல்ட் ஸ்டோரி” திரைப்படம் உலக அளவில் ரூ.200 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

இந்த படம் இந்தியாவில் மட்டும் சுமார் ரூ.172.18 கோடி வசூல் செய்துள்ளது. வெளிநாட்டில் சுமார் ரூ.28.63 கோடியும் மற்றும் மொத்தம் ரூ.200.81 கோடியும் வசூல் செய்துள்ளது. நீரஜ் பாண்டே இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தினை ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம் தயாரித்துள்ளது. அந்நிறுவனத்துடன் தோனியின் நீண்டகால நண்பரான அருண் பாண்டேவும் இணைந்து இதனை தயாரித்துள்ளார்.