Breaking News

நாளொன்றுக்கு 3.30 மணித்தியாலங்கள் மின்வெட்டு அமுல்!

நாட்டில் தற்போது நிலவுகின்ற மின்சாரா பற்றாக்குறையினை சமாளிக்கும் வகையில் நாளொன்றுக்கு மூன்றறை மணித்தியாலங்கள் மின்வெட்டினை அமுல்படுத்தவுள்ளதாக மின்சக்தி மற்றும் மீள் புதுப்பிக்கதக்க சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இம்மின் வெட்டானது பகல்வேளையில் 2.30 மணித்தியாலங்களுக்கும் இரவில் 01 மணித்தியாலமும் நடைமுறைப் படுத்தப்படவுள்ளதாக குறித்த அமைச்சின் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இம்மின் வெட்டானது நான்கு வலையங்களாக பிரித்து நடைமுறைபடுத்த படவுள்ளதாகவும் கொழும்பு நகர சபை எல்லைக்குட்பட்ட பகுதி, வைத்தியசாலைகள்,  மற்றும்  தொழிற்சாலைகள் அமைந்துள்ள பிரதேசங்களிலும் மின்வெட்டு இடம்பெறாது எனவும் மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.