Breaking News

சார்க் மாநாடு ஒத்தி வைப்பு..!

சார்க் மாநாடு வரும் 9 மற்றும் 10 தேதிகளில் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாபாத்தில் நடப்பதாக இருந்தது. இந்நிலையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்திய நிலைகளில் தாக்கி 18 ராணுவ வீரர்கள் பலியானார்கள்.

இதில் தீவிர பதிலடி கொடுக்க இந்தியா தீவிர முயற்சி எடுத்ததுடன் சர்வதேச சமூகத்தில் இருந்து பாகிஸ்தானை தனிமைப்படுத்த முயற்சிகள் மேற்கொண்டது. ஆனால், பாகிஸ்தான் அதையும் மீறி இந்திய எல்லையில் தாக்குதல் நடத்தியது. இதில் வெகுண்டெழுந்த இந்தியா தக்க பதிலடி கொடுக்க திட்டமிட்டது.

முதலில் சார்க் மாநாட்டில் கலந்து கொள்வதில்லை என்று அறிவித்தது. இந்தியாவைத்தொடர்ந்து ஆப்கானிஸ்தான்,வங்காளதேஷ்,பூடான்,நேபாளம்  போன்ற நாடுகளும் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாக கூறி சார்க் மாநாட்டை புறக்கணித்தன. இதனால் 19வது சார்க் மாநாடு ஒத்தி வைக்கப்படுவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

மீண்டும் சார்க் மாநாடு நடப்பதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.