15 வயது மகளை துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு விளக்கமறியல்
கடந்த ஏப்ரல் மாதம் 16ஆம் திகதி பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாடுக்கமைவாக திருகோணமலை, கிண்ணியா பொலிஸ் பிரிவுபகுதயில் தமது 15 வயது மகளை வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட தந்தையை எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதவான் விஷ்வானந்த பெர்ணான்டோ உத்தரவிட்டார். குறித்த சிறுமி தாய் வெளிநாடு சென்றுள்ளமையால் தந்தையுடன் வசித்து வந்தநிலையில் சிறுமி துஷ் பிரயோகம் செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் கடந்த சில மாதங்களாக தலைமறைவாக இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.