Breaking News

ஃபேஸ்புக்கினுள் நுழைந்த இந்திய விமான படை !

இந்திய விமான படையின் முதல் ஃபேஸ்புக் பதிவானது அதன் 84வது நிறுவன நாளான இன்று தொடங்கப்பட்டுள்ளது. சமூக ஊடகங்களில் ஒன்றான ஃபேஸ்புக்கில் நுழைந்துள்ளது.

தண்டிப்பதற்கான அதிகாரம் என்ற வாசகத்துடன், சூ-30 எம்.கே.ஐ. ரக போர் விமானத்தின் புகைப்படத்துடன் தனது முகப்பு பக்கத்தை இந்திய விமான படை உருவாக்கியுள்ளது.

இந்திய விமான படையின் தலைவர் அரூப் ராஹா வாழ்த்து செய்தியுடன், குறும்படம் ஒன்றும் முதல் பதிவாக வெளியிட்டுள்ளார். முதன்முதலில் பேஸ்புக்கிற்குள் முப்படைகளில் ஒன்றான ராணுவம் தனது பதிவினை தொடங்கியது.