இந்து சமுத்திரத்துக்கு ஏனைய நாடுகளின் கடற்படையினரும் வந்து செல்ல முடியும்!
இந்து சமுத்திரமனது இந்தியாவுக்கு மாத்திரம் பயன்பாடுள்ள சமுத்திரம் அல்ல. இந்த சமுத்திரத்துக்கு ஏனைய நாடுகளின் கடற்படையினரும் வந்து செல்ல முடியும் என்று சீனாவின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கைக்கு சீனாவின் நீர்மூழ்கி கப்பல்கள் சென்றமை தொடர்பில் இந்தியா முன்னர் எதிர்ப்பை வெளியிட்டிருந்தது. இதனையடுத்து சீனா தமது நீர்மூழ்கி கப்பல்களை பாகிஸ்தானில் தரித்துச் செல்லும் வகையில் செயற்பாடுகளை மாற்றியமைத்தது. இந்தநிலையில் பீஜீங்குக்கு சென்றுள்ள இந்திய செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட, சீனாவின் சிரேஸ்ட கடற்படை அதிகாரி சோ இ இந்து சமுத்திரத்தில் இந்தியா விசேட முக்கியத்துவத்தை வழங்கி வருகிறது. எனினும் இது சரியானதல்ல. இந்து சமுத்திரம் சர்வதேச திறந்தநிலை சமுத்திரமாகும்;. அங்கு ரஸ்யா, அமெரிக்கா,அவுஸ்திரேலியா போன்ற நாடுகளின் கடற்படையினர் வந்துச்செல்லலாம். இந்து சமுத்திரத்தில் மோதல்கள் ஏற்படலாம் என்று அமெரிக்க நிபுணர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளமையை சுட்டிக்காட்டிய சீன கடற்படை அதிகாரி இதனை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை என்று குறிப்பிட்டார்.



