சந்திரிகா - ரணில் இன்று முக்கிய சந்திப்பு !
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், முன்னாள் அதிபர் சந்திரிகா பண்டரநாயாக குமாரதுங்கவுக்கும் இடையில் இன்று முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது. முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச, நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளதன் பின்னணியில் இந்தச் சந்திப்பு நடக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.தற்போதைய அரசியல் நிலை குறித்து இந்தச் சந்திப்பில் முக்கியமாக ஆராயப்படவுள்ளது. குறிப்பாக, மகிந்த ராஜபக்சவை அதிகாரத்துக்கு வரவிடாமல் தடுப்பதற்கான உத்திகள் குறித்தே ரணில் விக்கிரமசிங்கவும், சந்திரிகா குமாரதுங்கவும் கலந்துரையாடவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த தேர்தலில், மகிந்த ராஜபக்சவைத் தோற்கடிப்பதில், ரணில்லும் சந்திரிகாவும் இணைந்து எடுத்த முடிவுகளே முக்கிய காரணமாக அமைந்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.



