Breaking News

மஹிந்த தரப்பினால் 40 ஆசனங்களைக் கூட பெற்றுக் கொள்ள முடியாது.

மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட தரப்பிற்கு எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 40 ஆசனங்களைக் கூட பெற்றுக் கொள்ள முடியாது என அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார். மஹிந்த ராஜபக்ச தேர்தலில் போட்டியிடுவது ஐக்கிய தேசியக் கட்சிக்கு சாதகத்தன்மையையே ஏற்படுத்தும். மஹிந்த ராஜபக்சவை பின்தள்ளி வெற்றியீட்ட அரசியல் பொறிமுறைமை உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள், எதிர்வரும் தேர்தல் பிரச்சாரத்தின் போது மஹிந்த தரப்பிற்கு பாதகமாகவே அமையும். கடந்த ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த பெற்றுக்கொண்ட 58 லட்ச வாக்குகளை இம்முறை பொதுத் தேர்தலில் பெற்றுக்கொள்ள முடியாது. பொதுத் தேர்தலின் போது 120 ஆசனங்களைப் பெற்றுக்கொள்வது ஐக்கிய தேசியக் கட்சியின் உத்தேசமாக அமைந்துள்ளது என ஜோன் அமரதுங்க சிங்கள ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.