மட்டக்களப்பு பல்கலைக்கழகக் கல்லூரி கட்டட நிர்மாணத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு
மட்டக்களப்பு பல்கலைக்கழகக் கல்லூரி கட்டட நிர்மாணத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்றைய தினம் (01) ரிதிதென்னையில் இடம்பெற்றது.
நூறு ஏக்கர் காணியில் கட்டப்படவுள்ள மட்டக்களப்பு பல்கலைக்கழகக் கல்லூரிக்கான அடிக்கல் நடும் நிகழ்வுக்கு முன்னாள் பொருளாதார அபிவிருத்திப் பிரதி அமைச்சரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் மட்டக்களப்பு பல்கலைக்கழகக் கல்லூரியின் ஆளுநர்சபைத் தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டதோடு அவர் உள்ளிட்ட குழுவினரால் மட்டக்களப்பு பல்கலைக்கழகக் கல்லூரிக்கான அடிக்கல் நடப்பட்டது.
மட்டக்களப்பு பல்கலைக்கழகக் கல்லூரியின் இஸ்லாமிய மனிதவள கற்கை நெறிகளுக்கான விரிவுரையாளர் ஏ.பீ.எம்.அலியார் ரியாதியின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் அம்பாறை மாவட்ட ஜம்இய்யதுல் உலமாவின் பிரதித் தலைவரும் அஷ் ஷஹ்வா இஸ்லாமிய கல்லூரியின் பணிப்பாளருமான அல்ஹாஜ் ஏ.எல்.எம்.ஹாஷிம் சூரியினர் சிறப்புரை நிகழ்த்தப்பட்டது.
இந் நிகழ்வில் தென் கிழக்குப் பல்கலைக்கழக அதிகாரிகள் புத்திஜீவிகள், ஊர்ப் பிரமுகர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் என பெருந்திரளானேர் பங்கு பற்றியமை குறிப்பிடத்தக்கது.
நமது நிருபர்



