இன்புளுவென்சா AH1N1 தொற்று காரணமாக 42 பேர் பலி
இலங்கையில் இவ்வாண்டு ஜனவரி தொடக்கம் தற்போது வரை இன்புளுவென்சா AH1N1 தொற்று காரணமாக 42 பேர் உயிரிழந்துள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு வட்டாரங்கள் தெரிக்கின்றன.
இன்புளுவென்சாவினால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு காய்ச்சல்இ தலைவலிஇ இருமல் மற்றும் தொண்டை நோவு என்பன அறிகுறிகளாகக் காணப்படுவதோடு வாந்தியும் வயிற்றோட்டும் காணப்படும்.
நோய் கடுமையாகும்போது நெஞ்சுவலியும்இ சுவாசிப்பததில் சிரமமும் ஏற்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இன்புளுவென்சா என சந்தேகிக்கப்படக்கூடிய இவ்வாறான அறிகுறிகள் தென்படுமிடத்து உடனடியாக அரசாங்க வைத்தியசாலையொன்றிலோ அல்லது தகுதிவாய்ந்த வைத்தியர் ஒருவரிடமோ சிகிச்சை பெற்றுக்கொள்ளுமாறு தொற்றுநோயியல் பிரிவு மற்றும் சுகாதார மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சு அகியன பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளன.
நமது நிருபர்
நமது நிருபர்



