மகிந்தவுக்கு இடமில்லை – மைத்திரி உறுதி !
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட வாய்ப்பு வழங்க முடியாது என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய பிரமுகர்களுடன் நேற்று நடத்திய சந்திப்பின் போதே, சிறிலங்கா அதிபர் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளார். அதேவேளை, மகிந்த ராஜபக்சவுக்கு தேசியப் பட்டியல் ஆசனத்தை வழங்க முடியும் என்று மைத்திரிபால சிறிசேன கூறியதாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.



