Breaking News

கிழக்குமாகாண ஆசிரியர் நியமனங்கள் தொடர்பில் பிரதமருடனான பேச்சுவார்த்தை வெற்றியளித்துள்ளது !

இம்முறை 2016  ஆம் ஆண்டு கல்வியியற் கல்லூரிகளில் தேசிய டிப்ளோமா கற்கை நெறியை நிறைவு செய்து கிழக்கு மாகாணத்திற்கு வெளியே நியமனம் பெற்ற மாணவர்களின் பிரச்சினை தொடர்பில் முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் இன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்

இன்று முற்பகல் கொழும்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை நேரில் சந்தித்து கலந்துரைாயடிய கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட்,கல்வியியற் கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகளின் மாணவர்களின் பிரச்சினை குறித்து பிரதமருக்கு தௌிவுப்படுத்தியுள்ளார்

இதன் போது கிழக்கு மாகாண முதலமைச்சரின் கோரிக்கைகள் தொடர்பில் கவனம் செலுத்திய பிரதமர் இது  தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கல்நதுரையாடி விரைவில் நடவடிக்கை எடுப்பதாக  உறுதியளித்துள்ளார்

அத்துடன் கடந்த 2013 ஆம் ஆண்டு கணிதம்.விஞ்ஞானம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று பாடங்களுக்கும் 1134 ஆசிரியர்களுக்கான வெற்றிடம் காணப்பட்டதுடன் அதற்காக 1573 பேர் கிழக்கு மாகாணத்தில்  இருந்து விண்ணப்பித்திருந்த போதிலும்  390 பட்டதாரி ஆசிரியர்கள் மாத்திரமே நியமிக்கப்படவிருந்தனர்
இந்நிலையில் இது தொடர்பிலும் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹ்மட் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் எடுத்துரைத்திருந்தார்

மீதமான 744 பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனங்களை வழங்குவது தொடர்பிலும்  பிரதமர் சாதகமான நடவடிக்கைகள் எடுக்கப்பார்  என முதலமைச்சர் நம்பிக்கை வெளியிட்டார்
கல்வியியற் கல்லூரிகளில் கற்கையை பூர்த்தி செய்த கிழக்கு மாகாண ஆசிரியர்கள் வௌி மாவட்டங்களுக்கு நியமனம் வழங்கப்பட்டமை தொடர்பில் பல  போராட்டங்களை நடத்தி வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது