Breaking News

தென் கொரியாவில் புயலின் தாக்கத்தினால் 6 பேர் உயிரிழப்பு !!

அமெரிக்காவுக்கு தென் பகுதியில் உள்ள கரிபீயன் கடல் பகுதியில் மையம் கொண்டிருந்த மாத்யூ புயல் நேற்று ஹைதி மற்றும் டொமினிக்கன் குடியரசு நாடுகளை தாக்கி கடும் சேதத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து நீண்டநேரம் வலுவிழக்காத அந்தப் புயல் இன்று அதிகாலை கியூபா நாட்டையும் விட்டு வைக்கவில்லை. இதில் அந்த நாடும் கடுமையான சேதத்தை சந்தித்தது.

தற்போது பகாமாஸ் தீவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் இந்தப் புயல் இன்று இரவு அமெரிக்காவில் உள்ள புளோரிடாவை தாக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், தென் கொரியாவில் காபா புயல் தாக்கியதால் நாட்டின் தென்கிழக்குப் பகுதிகள் மற்றும் ஜேஜு தீவில் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் கடுமையான காற்றுடன் கனமழை பெய்தது. பின்னர் புயல் கிழக்கு கடற்கரையோரம் கரை கடந்ததால் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

இந்த புயல் தொடர்பான விபத்துக்களில் 6 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 4 பேரைக் காணவில்லை என்றும் பொது பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது. மேலும், 200 பேர் வீடுகளை இழந்துள்ளனர். மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் 2.29 லட்சம் குடும்பங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.