Breaking News

ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளை பெற்றெடுத்த 64 வயது மூதாட்டி !!!.

ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளை பெற்றெடுத்து மருத்துவர்களை ஆச்சரியப்படுதியுள்ளார் 64 வயது மூதாட்டி ஒருவர்.

அன்னாக்ரெட் ரவுனிங்க், இவர் ஒரு ஜெர்மன் ஆசிரியை. இவர் தான் ஒரே பிரசவத்தில் மூன்று ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தது.
இவருக்கு ஏற்கெனவே 13 பிள்ளைகள் உள்ள நிலையில், இந்த நான்கு குட்டி சுட்டீஸ் ஐவிஎஃப் சிகிச்சை முறையில் பிறந்துள்ளனர்.

அன்னாக்ரெட் ரவுனிங்க் ஐவிஎஃப் சிகிச்சை மூலம் குழந்தை பெற்றெடுக்க முடிவு செய்த போது இவரது குடும்பத்தினர் அவர் சுயநலமாக முடிவெடுக்கிறார் என அதிருப்தி தெரிவித்தனர். மேலும், அவர்கள் இந்த குழந்தைகளை பராமரிக்க உதவ முடியாது என்றும் கூறினர்.

அன்னாக்ரெட் ரவுனிங்க்-ன் பத்து வயதான இளைய மகள் தான், தான் விளையாட தம்பி – தங்கைகள் வேண்டும் என வற்புறுத்தியதாக கூறுகிறார்.

அன்னாக்ரெட் ரவுனிங்க்-கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு ஆறரை மாதங்களிலேயே நான்கு குழந்தைகளும் குறை பிரசவத்தில் பெற்றெடுக்கப்பட்டனர். நான்கு குழந்தைகளும் எடை குறைவாக இருந்ததால், இன்குபெட்டரில் ஒருவாரம் வைக்கப்பட்டனர். குழந்தைகள் வியக்கும் அளவுக்கு வளர்ச்சி அடைந்ததால் இப்போது ஆரோக்கியமாக உள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

பல மருத்துவர்கள் இவரது வயதை சுட்டிக்காட்டி ஐவிஎஃப் முறையில் கருத்தரிக்க மறுப்பு தெரிவித்தனர். ஆனால், அன்னாக்ரெட் ரவுனிங்க் ஜெர்மனியில் இருந்து உக்ரைன் சென்று அங்குள்ள மருத்துவர்களின் உதவி மூலம் குழந்தை பெற்றுள்ளார்.