அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் 24 மணிநேர அடையாள பணிப்பகிஷ்கரிப்பு
இன்று (30) காலை 8 மணி தொடக்கம் நாளை(01) காலை 8 மணி வரையுமான 24 மணிநேர அடையாள பணிப்பகிஷ்கரிப்பை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இப்பணிப் பகிஸ்கரிப்பானது வரவு செலவுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களான ஓய்வூதியம் இரத்துச் செய்யப்படவுள்ளமை, அரச ஊழியர்கள் மேலதிகமாக செய்யும் தொழில்களுக்கான வரி அதிகரிக்கப்பட்டுள்ளமை, இலவச மருத்துவ சேவைக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் தனியார் துறையினரிடம் வைத்தியசாலைகள் கையளிக்கப்படவுள்ளமை போன்ற விடயங்களுக்கள் அடங்குவதாக சங்கதின் இணைப்பாளர் டொக்டர் நலிந்த ஹேரத் பியூறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.