வாத்துக்களை கண்டதும் கொல்ல உத்தரவு!
ஒரு குரங்கை கொன்றால் ரூ. 300 சம்பளம் வழங்கப்படும் என அதிரடி அறிவிப்பை வெளியிட்டது இமாச்சல பிரதேச அரசு. இந்நிலையில் அரியானா மாநில அரசு வாத்துக்களை கொல்ல அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. ஹிஷாரில் சுற்றலா தலம் ஒன்றில் அமைந்துள்ள குளத்தில் சுற்றித் திரிந்த வாத்துக்கள் திடீரென செத்து விழுந்தன.
அவற்றை ஆய்வு செய்த போது பறவைக் காய்ச்சல் தொற்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வாத்துக்களை கொல்ல சுகாதாரத்துறையினர் முடிவு செய்தனர். அதன்படி உடனடியாக 150 வாத்துக்கள் பிடிக்கப்பட்டு கொல்லப்பட்டன. மேலும் தப்பிய வாத்துக்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
ஏற்கனவே டெல்லியில் தலைவர்களின் நினைவிடங்கள் அமைந்துள்ள பகுதியில் சில பறவைகள் சில மர்மமாக உயிரிழந்தன. அவற்றை பரிசோதித்த போது பறவைக் காய்ச்சல் கிருமிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.