Breaking News

பிரண்டையின் மருத்துவப் பயன்கள் !

பிரண்ட இலையுடன் , வேப்பிலை( சிறிது ), மிளகு ( 3 ) மூன்றையும் சேர்த்து அரைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் வயிற்றுப் புழுக்கள் ஒழியும்.

பிரண்டையை கணு மற்றும் நார் நீக்கி, நெய்யில் வதக்கி , மிளகு , உப்பூ சைர்த்துச் சாப்பிட்டால் இளைத்த உடல் பெருக்கும்.

உலர்ந்த பிரண்டை இலையை ( 100 கிராம் ) , சுக்கு (10 கிராம் ) , மிளகு ( 10 கிராம் )ஆகியவற்றுடன் சேர்த்து பொடியாக்கி தினமும் காலையில் 2 கிராம் அளவில் சாப்பிட்டால் குடற் புண் ,, தொண்டைப் புண் , ஆசனப் புண் போன்ன அனைத்தும் குணமாகும்.

பிரண்டையை இடித்துச் சாறு எடுத்து ,அதில் சிறிது பெருங்காயம் சேர்த்து சாப்பிட்டால் மாதவிலக்குப் பிரச்சனைகள் சரியாகும்.

பிரண்டை இலையுடன் இஞ்சி , பூண்டு சேர்த்து துவையல் செய்து சாப்பிட்டால் பித்த மயக்கம் , உடல் எரிச்சல் போன்றவை விலகும்.