Breaking News

என்னை ஆங்கிலம் பேசவைத்தது யார் தெரியுமா?

தனுஷ் 11 ம் வகுப்பு சாதாரண பள்ளியில் தான் படித்தார். படித்துக்கொண்டு இருக்கும்போதே, அவரது அப்பா அவரை ஹீரோவாக்க…இப்போ, கோலிவுட் தாண்டி ஹாலிவுட் வரை நடிக்கபோய் விட்டார். ஆங்கிலத்திலேயே பேசுகிறார். பேட்டி தருகிறார்.

எப்படி என்பதை, ‘நான் ஆங்கிலம் பேச என் மனைவி ஐஸ்வர்யா தான் காரணம். 2008 வரை எனக்கு ஆங்கிலம் தகராறு தான். அவர் எனக்கு ஆங்கில புத்தகங்களை கொடுத்து படிக்கச் சொல்லுவார். தெரியவில்லை என்றாலும் படிங்கள் என்பார். புத்தகத்தை எடுத்தவுடன் தூக்கம் வரும். அப்புறம் ஒரு வேகம் வந்தது. படித்து படித்து…தெரியாத வார்த்தைகளை கோடிட்டு, அவரிடம் கேட்பேன். அலுத்துக்கொள்ளாமல் எனக்கு சொல்லித்தந்ததின் விளைவு …இப்போது நன்றாக பேசுகிறேன்” தனுஷ் தெரிவித்துள்ளார்.