சட்டக்கல்லூரி மாணவி எழுதிய “அவளா “ நூல் வெளியீட்டு விழா
(லியோன்)
சட்டக்கல்லூரி மாணவி நூலாசிரியர் செல்வி ஆர் நன்சி தபோ தாருன்யா எழுதிய
“அவளா “ நூல் வெளியீட்டு நிகழ்வு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது .
சட்டக்கல்லூரி மாணவி எழுதிய “அவளா
“ நூல் வெளியீட்டு விழா நிகழ்வு புளியந்தீவு சேகரம் மெதடிஸ்த திருச்சபை
முகாமைக்குரு அருட்திரு ஜே . யோகராஜா
தலைமையில் 27.11.2016 இன்று
ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு சாள்ஸ் மண்டபத்தில்
நடைபெற்றது
நூலாசிரியர் சட்டக்கல்லூரி மாணவி செல்வி ஆர் நன்சி தபோ தாருன்யா மன்ரூரை சேர்ந்த
ரவிக்குமார் மற்றும் பெரிய கல்லாரை சேர்ந்த
ஆசிரியை அம்சலா ஆகியோரின் புதல்வியாவார் .
இவர் சிறு வயது முதல் சிறுகதை எழுதுவதும் ஓவியம் வரைவதிலும் ஆர்வம் கொண்ட இவர் மட்டக்களப்பு வின்சென்ட்
மகளிர் பாடசாலையில் ஏழாம் ஆண்டு கல்வி பயிலும் போது பல சிறுகதைகள் எழுதி பாடசாலை
வாசகசாலையில் வைத்து மற்றைய மாணவிகளையும் உற்சாக படுத்தி இருக்கின்றார் .
இவர் தனது 21 வயதில் 2012ஆம் ஆண்டு திருப்பங்கள் என்ற 75 பக்கங்களை
கொண்ட குறுநாவலை தனது கண்ணி முயற்சியாக எழுதி வெளியிட்டுள்ளார் .
சட்டத்துறையினை பயின்று வரும் செல்வி ஆர் நன்சி தபோ தாருன்யா தனது இரண்டாவது
நூலான “அவளா “ என்ற நூலினை எழுதி அதனை இன்று வெளியிட்டு வைத்துள்ளார் .
இந்த நூல் வெளியீட்டு விழா நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக கிழக்கு பல்கலைக்கழக ஓய்வுநிலை பேராசிரியர்
கலாநிதி எஸ் . யோகராசா , மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ் .
வியாலேந்திரன் , ஜெர்மனி வைட் பீகொக்
நிறுவன தலைவர் எம் . ஜெயராஜ் புளியந்தீவு
சேகரம் மெதடிஸ்த திருச்சபை முகாமைக்குருக்கள் , ஓய்வுநிலை ஆசிரியர்கள் ,
உறவினர்கள் . நண்பர்கள் என பலர் கலந்து சிறப்பித்தனர்