மட்டக்களப்பு புனித அந்திரேயா ஆலய 125 வது ஆண்டு நிறைவு விழா
(லியோன்)
மட்டக்களப்பு
புளியந்தீவு புனித அந்திரேயா ஆலய 125 வது ஆண்டு நிறைவு
விழா 27.11.2016 இன்று ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பில்
நடைபெற்றது .
இலங்கை எங்கிளிக்கன் திருச்சபையின் மட்டக்களப்பு புளியந்தீவு புனித அந்திரேயா ஆலயத்தின்
125 வது ஆண்டு நிறைவினை சிறப்பிக்கும் விசேட நன்றி வழிபாட்டு
ஆராதனை மட்டக்களப்பு எங்கிளிக்கன் திருச்சபையின் தலைமை பேராயர் அருட்திரு
டிலோராஜ் கனகசபை தலைமையில்
நடைபெற்றது .
நடைபெற்ற ஆண்டு நிறைவு விசேட ஆராதனையில் பிரதம விருந்தினராக கத்தோலிக்க திருச்சபையின் மட்டக்களப்பு மறை
மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை கலந்து
சிறப்பித்தார் .
மட்டக்களப்பு
புளியந்தீவு புனித அந்திரேயா ஆலய 125 வது ஆண்டு நிறைவு விழாவினை
சிறப்பிக்கும் வகையில் புதிய குழு அங்கத்தவர்களுக்கு திருமுழுக்கு வழங்கப்பட்டதுடன் , திருச்சபை
சிறார்களினால் விசேட ஆண்டு நிறைவு
விழா கொண்டாட்டங்கள் இடம்பெற்றது .
இந்த ஆலய 125 வது ஆண்டு நிறைவு விசேட நன்றி வழிபாட்டு ஆராதனை நிகழ்வில் மட்டக்களப்பு
எங்கிளிக்கன் திருச்சபையின் குருமுதல்வர்கள் , அருட்பணியாளர்கள் ,எங்கிளிக்கன் திருச்சபையின் மட்டக்களப்பு பிராந்திய சகல திருச்சபை அங்கத்தவர்கள் , கிறிஸ்தவ
ஒன்றியத்தில் இணைக்கப்பட்டுள்ள ஆறு சபைகளின் தலைமை குருவானவர்கள் ,சுயாதின சபை
பணியாளர்கள் , சபையின் மக்கள் என பலர் கலந்து சிறப்பித்தனர் .