அத்தியாவசியப் பொருட்கள் ஏழின் விலைகளை குறைப்பது தொடர்பான அறிவிப்பு அடுத்தவாரம் இடப்பெறும்.
வரவு செலவுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டதுக்கமைய ஏழு அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்பிற்கு ஏற்ப அடுத்தவாரம் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது..
இதன்படி;
1kg பயறு - 15 ரூபவாலும்,
1kg பருப்பு - 10 ரூபாவாலும்
1kg உருளை கிழங்கு, மண்ணெண்ணெய் மற்றும் நெத்தலி - 5 ரூபாவாலும்,
1kg வௌ்ளைச் சீனி - 2 ரூபாவாலும்,
12.5kg சமயல் எரியாயு 25 ரூபாவாலும் விலை குறைக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் ஹசித திலகரத்ன குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.