Breaking News

சிறுமியர்களின் வாழ்க்கைத் திறன் தொடர்பான ஒருநாள் செயலமர்வு !

(லியோன்)

சிறுவர் காப்பகங்களில் வாழ்கின்ற மற்றும் கல்வி கற்கின்ற சிறுமியர்களின் வாழ்க்கைத் திறன் தொடர்பான ஒருநாள் செயலமர்வு  மட்டக்களப்பில் நடைபெற்றது

நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களம் மற்றும் மண்முனை வடக்கு பிரதேச செயலகம் இணைந்து நடாத்தும் வாழ்க்கைத் திறன் தொடர்பாக  கோட்டமுனை மெதடிஸ்த சிறுமியர் இல்லம் மற்றும் சாந்தி பவான் சிறுமியர் இல்ல சிறுமியர்களுக்கான ஒருநாள் செயலமர்வு  (26) இன்று சனிக்கிழமை மட்டக்களப்பில் நடைபெற்றது . 

பெற்றோர் மற்றும் உறவுகளின் பராமரிப்பு இன்றி சிறுவர் காப்பகங்களில் வாழ்கின்ற மற்றும் கல்வி கற்கின்ற சிறுமியர்களின் வாழ்க்கைத் திறன் எவ்வாறு அமைய  வேண்டும் என்ற நோக்காக கொண்டு சிறுவர் உரிமை மேம்பாட்டு திணைக்களம் பல விழிப்புணர்வு கருத்தரங்குகளை பிரதேச செயலக மட்டத்தில் நடத்தி வருகின்றது .

இதன் முதல் கட்ட  செயல்பாடாக மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குற்பட்ட  கோட்டமுனை மெதடிஸ்த சிறுமியர் இல்லம் மற்றும் சாந்தி பவான் சிறுமியர் இல்ல மாணவர்களுக்காக இந்த செயலமர்வு இன்று நடத்தப்படுகின்றது .

இந்த  விழிப்புணர்வு கருத்தரங்கானது  சிறுவர் நன்னடத்தை அழுகு உத்தியோகத்தர் டி . கந்தசாமியின் ஏற்பாட்டில் மண்முனை வடக்கு பிரதேச செயலக சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் சி . உதயராஜ் ஒழுங்கமைப்பில்  மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி .தவராஜா தலைமையில்   நடைபெற்றது .

இந்த கருத்தரங்கில் வளவாளராக மாவட்ட செயலக சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் வீ . குகதாசன் கலந்துகொண்டு விரிவுரைகளை வழங்கினார்