படகு கவிழ்ந்ததில் 18 பேர் பலி..! 44 பேரைக்காணவில்லை !!
மலேசியாவிலிருந்து இந்தோனேசியாவிற்கு படகில் பயணம் செய்பவர்கள் அதிகரித்துவரும் நிலையில், நேற்று 101 பேருடன் படகில் சென்றபோது இந்தோனேசியாவின் பாதம் தீவில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
கடலில் இருந்த பாறை மோதி நடந்த இந்த விபத்தில், 18 பேர் பலியாகியுள்ளதாகவும், 38 பேரை மீட்டுள்ளதாகவும் மீட்பு குழுவினர் தெரிவித்தனர். மேலும் எஞ்சியுள்ள 44 பேர் மாயமாகியுள்ளனர். அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மலேசியாவின் ஜோஹோர் மாநிலத்தில் இருந்து 98 புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் 3 சிப்பந்திகளுடன் படகு ஒன்று புதன்கிழமை இந்தோனேசியாவுக்கு வந்தது. அந்த படகு இந்தோனேசியாவின் பாதம் தீவை அடைந்தபோது கடலில் இருந்த பாறை மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
மீட்பு பணியில் ஹெலிகாப்டர் பயன்படுத்தப்படவுள்ளதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.