திருமணத்திற்கு பயந்து ஓடிய காதலன் 4 ஆண்டுகளுபின் ஏ.டி.எம் வரிசையில் சிக்கினான்! புரட்டி எடுத்த காதலி !!!
மகாராஷ்டிராவின், நாசிக் பகுதியில் உள்ள ஏ.டி.எம் ஒன்றில் பணம் எடுப்பதற்காக பொதுமக்கள் பலரும் வரிசையில் காத்து கிடந்தனர்.
அப்போது, அங்கு வந்த 27 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவர் திடீரென்று அந்த வரிசையில் நின்று கொண்டிருந்த இளைஞர் ஒருவரை இழுத்து கண்மூடித்தனமாக தாக்கத் தொடங்கியுள்ளார்.
ஆத்திரம் அடங்காத அப்பெண் தன் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சிலரை போனில் தொடர்பு கொண்டு அங்கு வரவழைத்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர்கள் அந்த இளைஞனை கண்ட உடன் கடும் ஆக்ரோஷமாக தாக்கியுள்ளனர்.
இச்சம்பவத்தைக் பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக போலீஸாருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த போலீஸார் அவர்களை தடுத்தனர்.
இதனைதொடர்ந்து அந்த இளைஞனை அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமத்தித்தனர். மருத்துவமனையில் தற்போது அந்த இளைஞருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து போலீஸார் அவர்களிடம் விசாரணை நடத்திய போது சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. போலீஸாரிடம் பேசிய அப்பெண் , தானும், அந்த இளைஞனும் காதலித்து வந்ததாகவும், பின் வீட்டார் சம்மதத்துடன் திருமணம் வரை சென்றதாகவும் கூறியுள்ளார்.
ஆனால் திடீரென்று திருமணம் நெருங்கி கொண்டிருந்த வேளையில் அவர் தலைமறைவாகிவிட்டதாகவும், அதன் பிறகு நான்கு ஆண்டுகள் சென்ற நிலையில், தற்போது திடீரென்று அவரை ஏ.டி.எம். வாசலில் கண்ட போது, ஆத்திரத்தை கட்டுப்படுத்த முடியாமல் தாக்கியதாக கூறியுள்ளார். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.