Breaking News

சிறுபான்மை சமூகத்தவர் நல்லிணக்கத்துக்கு தடையானவர்கள் அல்லர்

கிழக்கில்  படையினர் வசமுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பில் அரசாங்கம் விரைவில் ஒரு தீர்மானத்துக்கு வர வேண்டும்  என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்தெரிவித்தார்.

யுத்தம் முடிவடைந்து பல ஆண்டுகள் ஆனபோதும் இன்னும்பொதுமக்கள் தமது காணிகளுக்குசெல்ல  முடியாமல் ஏக்கத்துடன் காத்திருக்க வேண்டிய நிலை தொடர்வது எவ்வித்த்திலும் ஏற்றுக்கொள்ள  முடியாதவொரு  விடயம் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்.

மட்டக்களப்பு வலய பாடசாலைகளுக்கு  தளபாடங்கள் மற்றும் தொழில்நுட்ப உபகரணங்கள் வழங்கிவைக்கும் நிகழ்வுகள் காத்தான்குடி  அன்வர் வித்தியாலம் மற்றும் ஏறாவூர் ஜிப்ரியா வித்தியாலயங்களில் இடம்பெற்றபோது  அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே  கிழக்கு முதலமைச்சர்  இதனைக் கூறினார்

இதன் போது  மட்டடக்க்ளப்பு  வலயத்திலுள்ள  74 பாடசாலைகளுக்கான உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டதுடன் இதில்  காத்தான்குடி கோட்டப்பாடசாலைகள்  30ற்கும் ஓட்டமாவடி கோட்டப்பாடசாலைகள் 20க்கும் மற்றும் ஏறாவூர் கோட்டப்பாடசாலைகள் 18 இற்கும் உபகரணங்கள்  கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டினால் வழங்கிவைக்கப்பட்டன.

இங்கு தொடர்ந்தும்  கருத்து தெரிவித்த முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் ,அரசாங்கம் இன்று நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப  பல் வேறு முயற்சிகளையும் வேலைத்திட்டங்களையும் முன்னெடுத்து வரும் நிலையில்  கிழக்கு மக்களின் நல்லெண்ணத்தை அவர்கள் பெற வேண்டுமானால் மக்களின் காணிகளை விடுவித்து அவர்கள் வாழ்வதற்கு உரிய சூழலை ஏற்படுத்த வேண்டும்.

கிழக்கில் பொதுமக்களின் காணிகள் இன்னும் படையினர் வசம் இருக்கையில் அவர்கள் பகுதியிலிருந்து படையினர் வௌியேறாமல் நல்லிணகத்தை ஏற்பட முடியாது என்பதை அனைவரும் புரிந்த கொள்ள வேண்டும்.

மக்கள் தாம் எப்போது சுதந்திரமாக பாதுகாப்பாக நிம்மதியாக இருக்கின்றோம் என உணர்கின்றார்களோ அப்போது தான் நல்லிணக்கம் கட்டியெழுப்பப்படும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

அண்மைக்காலமாக சிறுபான்மை மக்களின் காணிகளில் இடம்பெறும் அத்துமீறல்கள்,அவர்களின் பகுதிகளில் பலவந்தமாக வைக்கப்படு சிலைகள் மற்றும் சிறுபான்மை மக்களின் பகுதிகளில் எழுப்பப்டும் விஹாரைகள் ஆகியன சிறுபான்மையினர் மனங்களில் மேலும் அச்சத்தையும் நிம்மதியற்ற நிலையையே ஏற்படுத்தும்

முஸ்லிம் தமிழ் சமூகங்கள் ஒரு போதும் நல்லிணக்கத்திற்கு தடையானவர்கள் அல்ல என்பதுடன் பெரும்பான்மையினரின் அவர்கள் மீதான பார்வை மாற்றப்பட வேண்டியுள்ளது.
சிங்களவர்கள் மாத்திரம் வசிக்கும் பகுதிகளில் பள்ளிவாசலையோ கோயிலையோ எழுப்பினால் எவ்வாறு அவர்களின் மன நிலை இருக்குமோ அது போன்றே சிறுபான்மையினரின் மனங்களில் உள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்,

நல்லாட்சி அரசாங்கம் நல்லிணக்கத்தை வென்றெடுக்க முதலில் மக்களின் மனங்களை வென்றெடுக்க வேண்டும் அதற்கு வடக்கு கிழக்கில் படையினர் வசமுள்ள காணிகள் மக்களிடம் கையளிக்கப்பட்டு  பொதுமக்கள் வாழும் பகுதிகளிலிருந்து படையினர் வௌியேற்றப்பட்டு இயல்பு வாழ்க்கைக்கு வழி வகுக்கப்பட  வேண்டும்.

இன்று காணியதிகாரம் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டிருந்தால் இன்று தமது சொந்தக் காணிகளைப் பெற்றுக் கொள்வதற்கு  மக்கள் ஆர்ப்பாட்டங்களையும் போராட்டங்களையும் நடத்த வேண்டிய தேவையேற்பட்டிருக்காது என்பதை இந்த இடத்தில் கூறிக் கொள்ள விரும்புகின்றேன்