Breaking News

அனர்த்த முகாமைத்துவம் மற்றும் தயார் நிலை தொடர்பாக சித்தரிக்கும் 2016 ஆண்டுக்கான மாணவர்களின் சித்திர போட்டியின் இறுதி தெரிவு மட்டக்களப்பில்...

(லியோன்  )

அனர்த்த முகாமைத்துவம் மற்றும் தயார் நிலை தொடர்பாக சித்தரிக்கும்    2016 ஆண்டுக்கான மாணவர்களின்  சித்திர போட்டியின்  இறுதி தெரிவு  மட்டக்களப்பில் நடைபெற்றது 

மனித நேய அமைப்புக்களின் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் சமாதானத்திற்கும் அகிம்சைக்குமான அமைப்பின் அனுசரணையில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மையம் மற்றும் மட்டக்களப்பு  கல்வித்திணைக்களம் ஆகியன இணைந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள  05 கல்வி வலயத்திற்குற்பட்ட  34 பாடசாலை மாணவர்களுக்கிடையில் நடத்தப்பட்ட அனர்த்த இடர் குறைப்பு மற்றும் தயார் நிலை தொடர்பாக சித்தரிக்கும் 2016 வருடத்திற்கான சித்தர  போட்டியின் இறுதி தெரிவு (25) வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு வலய கல்வி பணி மணையில் நடைபெற்றது . 

இந்த சித்திர போட்டியானது  மாணவர்களின் அனர்த்த இடர் குறைப்பு முகாமைத்துவம் மற்றும் தயார்நிலை தொடர்பான அறிவையும் ,திறனையும் மாணவர்களின் வரைதல் ஆற்றல் ஊடாக வெளிபடுத்தப்பட்டு அனர்த்தத்திற்கு ஈடுகொடுக்கும் எதிர்கால சமூகத்தை உருவாக்கும் நோக்குடன்

1,வறட்சியும் நீர் முகாமைத்துவமும்
2, வெள்ளமும் இடர் குறைப்பு வழிமுறைகளும்
3, சுனாமி மற்றும் சூறாவளி இடர் குறிப்பும் முன் ஆயத்தமும்
4 சிறந்த திண்மக்கழிவு  முகாமைத்துவமும் சுற்றாடல் ,

சுகாதார பாதுகாப்பு ஆகிய தலைப்புக்களில் ணவர்களுகிடையில் நடத்தப்பட்ட போட்டிகளில்  சித்திரங்கள்  காட்சிப்படுத்தப்பட்டு அதன் இறுதி தெரிவு மட்டக்களப்பு வலய கல்வி பணி மணையில் (25) நடைபெற்றது . 

இதன் போது சிறந்த சித்திரங்களை  தெரிவு செய்யும்  தெரிவு குழுவில் மட்டக்களப்பு கல்வி வலய அதிகாரி எஸ் . ரவீசந்திரன் , பட்டிருப்பு கல்வி வலய அதிகாரி கே . சுந்தரலிங்கம் , மட்டக்களப்பு மத்தி ஏறாவூர் கல்வி வலய அதிகாரி  எம் .எஸ் . கே . ரகுமான் , கிழக்கு பல்கலைக்கழக  புவியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் ஆர் . கிருபராஜா ஆகியோர் நடுவர்களாக கலந்துகொண்டனர்

இந்த தெரிவு குழுவினால் இறுதி தெரிவுக்கு தெரிவு செய்யப்பட சித்திரங்களின் கண்காட்சியும்  மற்றும்  அதற்கான பரிசளிப்பு நிகழ்வும்  எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது