Breaking News

மட்டக்களப்பு கல்வி வலய ஆசிரியர்களுக்கான வாண்மை விருத்தி தொடர்பான செயலமர்வு !

(லியோன்)

மட்டக்களப்பு கல்வி வலய ஆசிரியர்களுக்கான  வாண்மை விருத்தி தொடர்பான செயலமர்வு மட்டக்களப்பு வலயக் கல்வி பணிமனையில் நடைபெற்றது .

மட்டக்களப்பு வலயக் கல்விப்பணிப்பாளர் கே .பாஸ்கரன் தலைமையில்  ஆய்வு அபிவிருத்திக் கிளை பிரதிக் கல்விப் பணிப்பாளர் (நிர்வாகம்) பி .கோவிந்தராஜாவின் ஒழுங்கமைப்பில் மட்டக்களப்பு கல்வி வலயத்தில் கல்வி அபிவிருத்தி தொடர்பான செயற்பாடுகளை சிறந்த முறையில் முன்னெடுத்துச் செல்வதற்காக ஆசிரியர்களுக்கு  வாண்மை விருத்தியை ஏற்படுத்தும் நோக்கில் ஆய்வு அபிவிருத்திக் கிளையின் செயலமர்வு மட்டக்களப்பு வலயக் கல்வி பணிமனையில் இன்று நடைபெற்றது .

பாடசாலை மாணவரது பரீட்சை பெறுபேறுகள் , தவணைப் பரீட்சை புள்ளிகளை அடிப்படையில் வைத்து முறையான பகுப்பாய்வுகள் மற்றும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன .

இந்த பகுப்பாய்வுகளை அடிப்படையாக கொண்டு ஆசிரியர்களின் வாண்மை விருத்தியை ஏற்படுத்துவதன் மூலமாக பாடசாலை மாணவர்களது கல்வி அடைவு மட்டத்தை அதிகரிப்பதே இந்த ஆய்வு அபிவிருத்தி கிளையின் திட்டமாகும் .

அந்த  வகையிலே இந்த செயலமர்வு பிரதானமாக 5 பாடங்களை அடிப்படையாக கொண்டு கற்றல் , கற்பித்தல் செயற்பாட்டுடன் பிரச்சினைகள் இனங்காணப்பட்டு  எதிர்காலச் செயற்பாடுகள் சிறந்த முறையில் திட்டமிட்டு நடைமுறைப்படுத்தும் வகையில் ஆசிரியர்களுக்காக  இந்த வாண்மை விருத்தி தொடர்பான செயலமர்வு  நடைபெற்றது .

இந்த செயலமர்வில் மட்டக்களப்பு கல்வி வலயத்தின் பிரதிக் கல்விப்பணிப்பாளர்கள் , உதவிக் கல்விப் பணிப்பாளர்கள் , சேவைக்கால ஆசிரிய ஆலோசகர்கள் , கல்வி சார் உத்தியோகத்தர்கள் , பாடசாலை அதிபர்கள் , ஆசிரியர்கள் கலந்துகொண்டனர் .