Breaking News

ஒரே ஒரு வெற்று குளிர்பான போத்தல் மூலம் பல லெட்சங்களை மோசடி நபர்

ஜெர்மனி நாட்டில் குளிர்பானத்தை அருந்து விட்டு, வெற்று போத்தல்களை மீள்சுழற்சிக்கான தானியங்கி இயந்திரத்தில் செலுத்தினால், அதற்காக குறிப்பிட்ட பணம் மற்றும் ரசீது கிடைக்கும்.

அந்த நாட்டில் வாழும் குளிர்பான வியாபாரி ஒருவர், அந்த எந்திரத்தில் சில மாற்றங்களை செய்தார். அதாவது, காலி குளிர்பான பாட்டிலை அதனுள் செலுத்தினால் பணம் மற்றும் ரசீது வெளிவே வரும். அதேநேரம், அந்த காலி பாட்டில் இயந்திரத்தின் மற்றொரு வழியில் வெளியே வந்து விழும்.

எனவே, ஒரு ஒரு வெற்று போத்தலை 1,77, 451 முறை அந்த தானியங்கி இயந்திரத்தில் மீண்டும் மீண்டும் செலுத்தி ரூ.32 லட்சத்து 35 ஆயிரத்து 831 ரூபாயை அவர் பெற்றுள்ளார்.

மிகவும் தாமதமாக இதைக் கண்டறிந்த குளிர்பான நிறுவனம், அவர் மீது வழக்கு தொடர்ந்தது. அதன் பின் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.