ஒரு சக்கரம் இல்லாமல் விமானத்தை சாமர்த்தியமாக தரை இறக்கிய பயிற்சி விமானி !!!
அவுஸ்திரேலியாவின் குவீன்ஸ்லாந்து மாநிலத்தின் பிரிஸ்பேன் நகரில் விமானிகளுக்கு பயிற்சி அளிப்பதற்கான ‘பஸைர்‘ என்ற நிறுவனத்துக்கு சொந்தமான ‘பைப்பர் வாரியர்’ ரக விமானத்தில் வழக்கம்போல் பிரிஸ்பேன் விமான நிலையை ஓடுதளத்தில் இருந்து புறப்பட்ட ஒரு பயிற்சி விமானி, வானத்தில் பறந்து கொண்டிருந்தார்.
ஓடுதளத்தில் இருந்து உயர கிளம்பிய பின்னர் அந்த விமானத்தில் இடதுப்புற சக்கரம் காணாமல் போயிருந்ததை அறிந்த கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். ஓடுபாதையில் இருந்து உயரக்கிளம்பியபோது, மூன்று சக்கரங்களில் ஒன்று கீழே கழன்று விழுந்திருக்கலாம என்பதை யூகித்துக் கொண்ட அதிகாரிகள் அந்த விமானத்தில் பத்திரமாக தரையிறங்க வேண்டுமே.., என்ற கவலையில் மூழ்கினர்.
அதை ஒட்டிச்சென்ற பயிற்சி விமானிக்கும் தகவல் அளிக்கப்பட்டது. விமானத்தில் உள்ள எரிபொருள் தீரும்வரை வானத்தில் வட்டமடித்து கொண்டிருந்த அந்த பயிற்சி விமானி, மூன்று சக்கரங்களில் ஒன்ற இழந்திருந்த அந்த விமானத்தை இரண்டே சக்கரத்தின் உதவியுடன் சாதுர்யமாகவும், பத்திரமாகவும் தரை இறக்கினார்.