Breaking News

இந்திய கடவுச்சீட்டை உபயோகித்தது இலங்கை பெண்கள் கடத்தும் வியாபாரம் அம்பலம் !!!

நேற்று மாலை சுற்றுலா விசாவில்  டுபாய் செல்வதற்கென கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு இந்திய கடவுச்சீட்டுடன் வருகை தந்திருந்த 6 பெண்களை சந்தேகத்தின் பேரில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விமான நிலையப் பிரிவு அதிகாரிகள் சோதனையிட்போடுள்ளனர்.

இதன்போது அவர்களிடம் இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட கடவுச்சீட்டு 6 இருந்துள்ளதுடன், மேலும், இலங்கை கடவுச்சீட்டுகள் 6ம் கண்டு பிடிக்கப்பட்டுள்லநிலையில், மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணையின்போது அவர்கள்  வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் விசாரணையில் இருந்து தப்பிக்கொள்ளவே இந்திய கடவுசீட்டுகள் பயன்படுத்தப்படுவதாக தெரிவித்துள்ளனர். குறித்த வியாபாரத்தை நடத்துபவர் தொடர்பான முக்கிய தரவுகளை கைதுசெய்யப்பட்ட பெண்கள் வழங்கியவிடத்து மேலதீக விசாரணைகளை காவல்த்துறையினர் முன்னெடுப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.