Breaking News

வியக்க வைக்கும் உலக அதிசயங்களில் ஒன்றான ஈபில் டவர் 5 மில்லியன் யூரோவுக்கு ஏலம்!!…

உலக அதிசயங்களில் ஒன்றான ஈபிள் டவரில் உள்ள 14 இரும்பு படிக்கட்டுகள் 5 மில்லியன் யூரோவுக்கு ஏலம் விடப்பட்டுள்ளன.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் அமைந்துள்ள உலகப் புகழ் பெற்ற ஈபிள் டவரின் கட்டுமானம் 1887 ஆம் ஆண்டு துவங்கி 1889 ஆம் ஆண்டு முடிக்கப்பட்டது.

324 மீட்டர் உயரம் கொண்ட இந்த ஈபிள் டவர் முழுவதும் இரும்பினால் கட்டப்பட்டது . 1983ல் ‘லிப்ட்’ வசதி செய்யப்பட்டதால், அதுவரை அங்கு பயன்படுத்தப்பட்டு வந்த இரும்பிலான படிக்கட்டுகள் 24 பாகங்களாக வெட்டி எடுக்கப்பட்டு பாரிசில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டன.அவை கடந்த 1983-ஆம் ஆண்டில் இருந்து ஏலத்தில் விடப்பட்டு வருகிறது.

சமீபத்தில் நடந்த ஏலத்தில் இதன் 14 இரும்பு படிக்கட்டுகள் 523,800 யூரோக்களுக்கு ஏலம் விடப்பட்டது.

இது குறித்து பேசிய ஏலத்தை நடத்திய பிரான்கோயஸ் டாஜன் , தொலைபேசி மூலமாகவும் ஏலம் எடுக்க கடுமையான போட்டி நிலவியது என்றும், இது பிரான்ஸ் மக்களின் பாரம்பரியம் மீதான ஆர்வத்தை காட்டியது என்றும் கூறினார்.

மேலும், இதற்கு முன்பு 2013 ஆம் ஆண்டு நடந்த ஏலத்தில் 19 படிக்கட்டுகள் 220,000 யூரோவிற்கு ஏலத்தில் எடுக்கப்பட்டது.

ஈபிள் டவர் நிறுவப்பட்டது முதல் தொடர்ந்து 41 ஆண்டுகள், உலகிலேயே மிக உயரமான கட்டிடம், என்ற பெயருடன் விளங்கியது குறிப்பிடத்தக்கது.