Breaking News

மட்டக்களப்பு மாவட்டத்தில் 26574 பரீட்சாத்திகள் கல்வி பொது சாதாரண தர பரீட்சைக்கு தோற்றியுள்ளனர்

(லியோன்)

2016 ஆண்டுக்கான  கல்வி பொது சாதாரண தர பரீட்சைகள் இன்று 06.12.2016  நாடளாவிய ரீதியில் ஆரம்பமானது


இம்முறை  புதிய மற்றும் பழைய பாடத்திட்டங்களுக்கு அமைவாக பரீட்சைகள் நடைபெறுகின்றன .புதிய பாடத்திட்டத்திற்கு 324459 மாணவர்களும் பழைய பாடத்திட்டத்திற்கு 367718 மாணவர்களும் பரீட்சைக்கு  தோற்றுகின்றனர் .

இப்பரீட்சைகள்  நாடளாவிய  ரீதியில் 5669 மத்திய பரீட்சை நிலையங்களில் நடைபெற்றது   .

இதன் கீழ்   மட்டக்களப்பு மாவட்டத்தில்   05  வலயத்திலும் புதிய பாடத்திட்டத்திற்கான 84 பரீட்சை நிலையங்களும் பழைய  பாடத்திட்டத்திற்கான 102 பரீட்சை நிலையங்களும் மொத்தமாக 186 பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன .

இதில்  புதிய பாடத்திட்டத்திற்கான  பாடசாலை பரீட்சாத்திகள்  8536  பேரும்   பிரத்தியோக பரீட்சாத்திகள் 2359 பேரும்  மொத்தமாக  புதிய பாடத்திட்டத்திற்கு அமைய 10895  பரீட்சாத்திகள் கல்வி பொது சாதாரண தர பரீட்சைக்கு தோற்றுகின்றனர் .

இதேவேளை  பழைய  பாடத்திட்டத்திற்கான  பாடசாலை பரீட்சாத்திகள்  1507  பேரும்   பிரத்தியோக பரீட்சாத்திகள் 14172  பேரும்  மொத்தமாக   பழைய  பாடத்திட்டத்திற்கு அமைய 15679  பரீட்சாத்திகள் கல்வி பொது சாதாரண தர பரீட்சைக்கு தோற்றுகின்றனர்

மட்டக்களப்பு மாவட்டத்தில்  மட்டக்களப்பு , மட்டக்களப்பு மத்தி ,கல்குடா ,பட்டிருப்பு ,மண்முனை மேற்கு  ஆகிய 05  வலயத்திலும் புதிய பாடத்திட்டத்திற்கான 84 பரீட்சை நிலையங்களும் பழைய  பாடத்திட்டத்திற்கான 102 பரீட்சை நிலையங்களும் மொத்தமாக 186 பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டு புதிய மற்றும் பழைய பாடத்திட்டத்திற்கு அமைவாக   மட்டக்களப்பு மாவட்டத்தில்  26574 பரீட்சாத்திகள் கல்வி பொது சாதாரண தர பரீட்சைக்கு தோற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது