Breaking News

அடுத்து, தனுஷ் நடிக்க உள்ள படமும் இரண்டாம் பாகமும்!

சில படங்கள் தொடர்ந்து பார்க்க போரே அடிக்காது. சிங்கம், பில்லா என்று உதாரணம் சொல்லலாம். இந்த வரிசையில் தனுஷின் வேலையில்லா பட்டதாரி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும்
பிசியில் இருக்கும் தனுஷ், அடுத்து இன்னொரு இரண்டாம் பாக படத்திலும் நடிக்க உள்ளார்.

வேலையில்லா பட்டதாரி(விஐபி) 2 படத்தை தனுஷ், அமலா பால், சமுத்திரக்கனி, சரண்யா பொன்வண்ணன் கஜோல் ஆகியோர் நடிக்க சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்குகிறார்.

இந்த படத்தின் துவக்கத்தை ரஜினிகாந்த் கிளாப் அடித்து துவக்கி வைக்க,மும்பையில் இப்படத்தின் போட்டோ ஷூட் நடந்துள்ளது.

மின்சார கனவு படத்துக்கு அப்புறம் 20 ஆண்டுகள் கழித்து…நடிகை கஜோல், விஐபி 2 மூலம் தமிழில் நடிக்கிறார்.

இந்த சூழலில், தனுஷின் அடுத்த படமாக பாலாஜி மோகன் இயக்க…தனுஷ், காஜல் அகர்வால் நடித்த மாரி படத்தின் 2 பாகத்தின் ஸ்க்ரிப்டை முடித்து தனுஷுக்கு அனுப்பியாச்சாம்.

பவர் பாண்டி, வடசென்னை, என்னை நோக்கி பாயும் தோட்டா, விஐபி2 , இப்போ மாரி 2 என்று வரிசையாக படங்களை தொடர்ந்து கமிட் .