Breaking News

வாழ்க்கைச் செலவு அதிகரிதுள்ளமைக்கு முட்டாள்களே காரணம் !!

நேற்று முன்தினம் காலியில் இடம்பெற்ற ஒன்றிணைந்த எதிரணியின் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினரான மஹிந்த ராஜபக்‌ஷ, நாட்டில் தற்போது வாழ்க்கைச் செலவானது அதிகரிப்பதுக்கு அரசாங்கத்தின் கவனக்குறைவும்,  முட்டாள்தனமான முடிவுகளுமே காரணம் என்று தெரிவித்துள்ளார். 

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்   “45 தொடக்கம் 60 ரூபாய்க்கு, உங்களுக்கு இப்போது அரிசி கிடைக்கிறதா, தற்போது அது, 110 - 130 ரூபாய். இந்த நிலைமை, ஏன் வந்தது? நாட்டில், வாழ்க்கைச் செலவு ஏன் அதிகரித்தது?” என்று கேள்வியெழுப்பியதுடன், அரசாங்கம்   விவசாயம் தொடர்பாக எடுக்கப்பட்ட முட்டாள்தமான முடிவுகளாளே இந்நிலை ஏற்பட்டகாரணம் எனவும் தெரிவித்துள்ளார்.