Breaking News

இந்தியாவில் திருமண நிகழ்ச்சியில் நடனமாது சுட்டுக்கொலை !!

பஞ்சாப் மாநிலம் பதிண்டா மாவட்டம் மவுர் பகுதியில் திருமணம் நிகழ்ச்சி நேற்றிரவு நடைபெற்றது. அப்போது திருமண நிகழ்ச்சியில் பெண் டான்சரின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது மணமகனின் நண்பர்கள் அதிக போதையில் இருந்துள்ளனர்.

அவர்களின் ஒருவன் போதை தலைக்கேறியதும் மேடையில் நடனம் ஆடிக்கொண்டிருந்த 22 வயதான குல்விந்தர் கவுர் உடன் இணைந்து ஆட முயற்சி செய்துள்ளார். அப்போது சிலர் மேடை ஏறக்கூடாது என்று எச்சரித்துள்ளனர். இதனால் கோபம் அடைந்த அந்த வாலிபர் பெண் டான்சரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுக்கொன்றதாக தெரிவிக்கபடுகின்றது.