மட்டக்களப்பு தேரர் முயற்சித்த ஆர்ப்பாட்டத்துக்கு போலீஸ் தடை !
மட்டக்களப்பு மாவட்டத்தில் இனங்களுக்கிடையில் வெறுப்புணர்வைத் ஏற்படுத்தும் வகையில் சட்ட ரீதியற்ற ஒன்று கூடலைத் தடுக்கும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கின்றபோதும் நகரில் இன்றயதினம்(3) ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்க மட்டக்களப்பு மங்களராமய விஹாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் முயற்சித்ததால் மட்டக்களப்பு நகரில் சற்று பதற்றமான சூழல் ஏற்பட்டது.
பொதுபல சேனா அமைப்பின் ஞானசார தேரர் தலைமையிலான குழுவினர் மட்டக்களப்பு மங்களராம விஹாரைக்கு மேற்கொள்ள முயற்சித்த அவர்களின் பயணமானது பொலொன்னறுவை மாவட்டங்களின் எல்லையிலேயே தடுத்து நிறுத்தப்பட்டதுடன், மட்டக்களப்பில் பிக்குவால் முன்னெடுக்கப்பட்ட ஆர்பாட்டமானது பொலிஸாரின் முயற்சியால் தடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.