Breaking News

கோட்டமுனை பொதுசுகாதார பிரிவில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள்

(லியோன்)

டெங்கு  நோய் பெருக்கம்  அதிகமாகவுள்ள மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.


இதன் கீழ் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் டெங்கு  உள்ள பகுதியாக மட்டக்களப்பு மாநகரசபை  பகுதிகளில்  தெரிவு செய்யப்பட  கோட்டமுனை பொதுசுகாதார பிரிவில் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவும் ,மட்டக்களப்பு மாநகர சபையும் இணைந்து டெங்கு ஒழிப்பு பணிகள் 10.01.2017.செவ்வாய்கிழமை முன்னெடுக்கப்பட்டன.

முன்னெடுக்கப்பட்ட  சோதனை நடவடிக்கையின் போது  210  வீடுகள் மற்றும் அதனை அண்டிய  இடங்கள்  சோதனை மேற்கொள்ளப்பட்ட வேளையில் நுளம்புகள் பரவக்கூடிய வகையில் காணப்பட்ட பொருட்கள் அகற்றப்பட்டுள்ளதாகவும் டெங்கு குடம்பிகள் உள்ள இடங்களாக  இப்பகுதியில்  12  இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக  பொது சுகாதார பரிசோதகர் அமுதமாலன் தெரிவித்தார்.

இதன் போது  டெங்கு நுளம்புகள் பரவக்கூடிய சூழலை வைத்திருந்தவர்கள்   27 பேருக்கு  எச்சரிக்கை அறிவித்தல்கள் கொடுக்கப்பட்டதுடன்   மற்றும் 12 பேருக்கு எதிராக  எதிர்வரும் 16 ஆம் திகதி வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு  பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து   இப்பகுதியில் நுளம்பு பெருக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான  புகை விசுரும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன

இந்த சோதனை நடவடிக்கையில் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் பொலிஸ் உத்தியோகத்தர்கள், மாநகர சபை ஊழியர்கள்  கலந்துகொண்டனர்.