Breaking News

மஞ்சந்தொடுவாய் பாரதி வித்தியாலயத்தில் மண்முனை வடக்கு கல்விக் கோட்டத்தின் தைப்பொங்கல் விழா.

மண்முனை வடக்கு கல்விக் கோட்டத்தின் தைப்பொங்கல் கலாசார விழா மட்டக்களப்பு  மஞ்சந்தொடுவாய் பாரதி வித்தியாலயத்தில் நடாத்தப்பட்டது.

தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் அனுசரணையில் மண்முனை வடக்கு கல்விக் கோட்டம் நடாத்தும் தைப்பொங்கல் கலாசார விழா (18) புதன்கிழமை  மட்டக்களப்பு  மஞ்சந்தொடுவாய் பாரதி வித்தியாலயத்தில்  நடைபெற்றது.

மண்முனை வடக்கு கோட்டக்கல்வி பணிப்பாளர் எ.சுகுமாரன் தலைமையில் நடைபெற்ற பொங்கல் விழா நிகழ்வில்  பிரதம விருந்தினராக மட்டக்களப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் கே.பாஸ்கரன் கலந்துகொண்டு கல்விக் கோட்டத்தின்  தைப்பொங்கல் கலாசார விழா வினை ஆரம்பித்து வைத்தார். 

மஞ்சந்தொடுவாய் பாரதி வித்தியாலயத்தில் நடைபெற்ற பொங்கல் விழா நிகழ்வில் மண்முனை வடக்கு கல்விக் கோட்ட பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள்  மற்றும் முஸ்லிம் சகோதர பாடசாலை மாணவர்கள் கலந்துகொண்டனர்.

இதன் போது தமிழர் பண்பாட்டு விழுமிங்களை முஸ்லிம் சகோதர மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் பாரம்பரியங்களை பறைசாற்றும் கலாசார நிகழ்வுகளும் அலங்காரங்களும் இந்த பொங்கல் விழா நிகழ்வில் இடம்பெற்றமை  குறிப்பிடத்தக்கது.
(லியோன்)