Breaking News

டைட்டானிக் கப்பல் மூழ்குவதற்கு பனிப்பாறை கரணம் இல்லை அதிற்சியூட்டும் புதிய தகவல் !!!

மனித வரலாற்றில் மிக மோசமான சம்பவமாக கருதப்படும் டைட்டானிக் கப்பல் விபத்திற்கு கடலில் இருந்த பனிப்பாறை முக்கிய காரணம் இல்லை என தற்போது அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இங்கிலாந்து நாட்டில் உள்ள Southampton துறைமுகத்தில் இருந்து பிரமாண்டமான சொகுசு கப்பல் கடந்த 1912-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அமெரிக்காவில் உள்ள நியூயோர்க் நகருக்கு புறப்பட்டது.

ஆனால், நடுக்கடலில் ஏற்பட்ட பயங்கர விபத்தால் கப்பல் கடலில் மூழ்கியதுடன் அதில் பயணம் செய்த 1,500க்கும் மேலானவர்கள் பலியாகினர்.

உலகை உலுக்கிய இவ்விபத்திற்கு ‘நடுக்கடலில் இருந்த பனிப்பாறை மீது கப்பல் மோதியது காரணம்’ என இன்றளவும் கூறப்படுகிறது.

ஆனால், தற்போது இந்த கருத்தை முறியடிக்கும் விதத்தில் புதிய அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

பிரபல புகைப்படக்கலைஞரும், ஊடகவியலாளருமான Senan Molony என்பவர் டைட்டானிக் விபத்து தொடர்பாக கடந்த 30 ஆண்டுகளாக ஆய்வு மேற்கொண்டு வந்துள்ளார்.

டைட்டானிக் கப்பல் இங்கிலாந்து நாட்டில் இருந்து புறப்பட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் நடுக்கடலில் விபத்து ஏற்பட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பல ஆண்டுகளாக பல்வேறு வகைகளில் ஆய்வு செய்து வந்துள்ளார்.

இந்த ஆய்வின் முடிவில், ‘கப்பலின் மையப்பகுதிக்குள் தீவிபத்து ஏற்பட்டது தான் டைட்டானிக் கப்பல் மூழ்குவதற்கு மிக முக்கிய காரணம்’ என தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் விரிவாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இங்கிலாந்து நாட்டில் இருந்து புறப்பட்ட உடனே, கப்பலின் மூன்றாம் தளத்திற்குள் உள்ள பகுதியில் மிகப்பெரிய தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்து நிகழ்ந்து கப்பல் மூழ்கியபோது, பனிப்பாறை மோதிய பகுதிக்கு அருகில் சுமார் 30 அடி நீளத்திற்கு கறுப்பு அடையாளங்கள் உள்ளது புகைப்படங்களில் பதிவாகியுள்ளது.

இங்கிலாந்து நாட்டில் இருந்து கப்பல் புறப்பட்டபோது இந்த கறுப்பு அடையாளங்கள் இல்லை. இதுமட்டுமில்லாமல், இது விபத்து நேர்ந்தபோது ஏற்பட்ட தீவிபத்து அல்ல.

இதற்கு முன்னதாக, அதாவது 3 வாரங்களுக்கு முன்னதாகவே அந்த தீவிபத்து ஏற்பட்டு உட்புறமாகவே தீ எரிந்து வந்துள்ளது.

இந்த சூழலில் தான் கப்பல் பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டுள்ளது.

மேலும், பிரமாண்டமான டைட்டானிக் கப்பல் பனிப்பாறை மீது மோதிய பிறகும் பெரும் விபத்து தவிரக்கப்பட்டிருக்கும்.

ஆனால், கப்பலின் மையப்பகுதியில் ஏற்பட்ட தீவிபத்தானது சுமார் 1,000 டிகிரி செல்சியஸ் அளவிற்கு வெப்பம் பரவியது. இந்த வெப்பம் கப்பலின் வலிமையை சுமார் 75 சதவிகிதம் குறைத்து மிகவும் பலவீனமாக்கியது.

இந்த சூழலில் தான் கப்பல் பனிப்பாறை மீது மோதியதும் அது இரண்டாக உடைந்து கடலில் மூழ்கியுள்ளது என Senan Molony தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளரின் இக்கருத்து சரியானதாக உள்ளதால் டைட்டானிக் கப்பல் விபத்து தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு வரும் வல்லுனர்களும் இதனை ஏற்றுக்கொண்டுள்ளனர்.

மேலும், கடந்த 2008-ம் ஆண்டு Ray Boston என்ற ஊடகவியலாளர் நடத்திய ஆய்வில், ‘இங்கிலாந்து நாட்டில் இருந்து டைட்டானிக் கப்பல் புறப்படுவதற்கு 20 நாட்களுக்கு முன்னதாகவே கப்பலின் மையப்பகுதியில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

நடுக்கடலில் பனிப்பாறை மீது கப்பல் மோதாமல் இருந்தால் கூட நியூயோர்க் நகரை அடைவதற்கு முன்னதாகவே தீவிபத்தால் கப்பல் வெடித்து சிதறியிருக்க வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.