Breaking News

டிரம்ப்பினது குடியேற்ற தடை உத்தரவுகளில் எனக்கு உடன்பாடு இல்லை !!

அமெரிக்க ஜனாதிபதியாக கடந்த 20-ந் தேதி பதவி ஏற்ற நாள் முதல் டொனால்டு டிரம்ப் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். உள்நாட்டுப்போரில் சின்னாபின்னமாகி விட்ட சிரியாவில் இருந்து அகதிகள் அமெரிக்காவுக்கு வர காலவரையற்ற தடை போட்டுள்ளார். 

அதாவது, அடுத்த அறிவிப்பு வரும் வரையில் சிரியா அகதிகள், அமெரிக்காவில் நுழைய முடியாது. அடுத்து, ஈராக், சிரியா, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான், ஏமன் ஆகிய 7 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு விசா வழங்குவதை 3 மாதங்களுக்கு நிறுத்தி வைத்து டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். அதிபர் டிரம்ப்பின் இந்த உத்தரவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. டிரம்ப் உத்தரவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த அமெரிக்க நீதிமன்றங்கள் உத்தரவுக்கு  இடைக்கால தடை விதித்துள்ளன.

இந்நிலையில், அகதிகள் அமெரிக்காவுக்கு வர காலவரையற்ற தடை உத்தரவுக்கு கருத்து தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி ஒபாமா கூறியதாவது:

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பிறப்பித்துள்ள குடியேற்ற தடை உத்தரவுகளில் தனக்கு உடன்பாடு இல்லை.மக்களை அவர்களது நம்பிக்கையின் அடிப்படையில், மதத்தின் அடிப்படையில் பாரபட்சமாக நடத்துவது சரியல்ல என்று அவர் விமர்சித்திருக்கிறார்.