Breaking News

மாணவர்களுக்கு உதவியமைக்கென தீ வைக்கப்பட்ட மீனவர் குடியிருப்புகளுக்கு ரூபா 1000000 லாரன்ஸ் !!

சென்னை மெரினாவில் மாணவர்கள் நடத்திய ஜல்லிக்கட்டு போராட்டம் கடைசி நாளில் பயங்கர கலவரத்தில் முடிந்தது.

அந்த கலவரத்தில் அருகிலுள்ள மீன குப்பத்திலுள்ள வீடுகள் மற்றும் மீன் மார்க்கெட் தீவைத்து கொளுத்தப்பட்டது. மாணவர்களுக்கு உதவி செய்த, அடைகலம் கொடுத்த மீனவர்கள் பலர் போலீஸாரால் தாக்கப்பட்டதுடன் அவர்களின் உடமைகள் தீ வைக்கப்பட்டன.

இந்நிலையில் இன்று வலைதளம் மூலம் பேட்டியளித்த நடிகர் ராகவா லாரன்ஸ்: மாணவர்கள் போராட்டத்தின் போது கடைசிநாளில் கடல் வழியாக வந்தும் மீனவர்கள் மாணவர்களுக்கு உணவு அளித்தனர். அவர்கள் செய்த உதவியை மறக்க முடியாது இன்று அவர்கள் வாழ்வாதாரம் இழந்து நிற்கின்றனர். அவர்களுக்கு நாம் ஏதாவது வழியில் உதவ வேண்டும். மாணவர்கள் கையில் இருந்து ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் என சேர்க்க வேண்டும். நான் முதலாவதாக பத்து லட்சம் ரூபாய் மாணவர்கள் கையில் கொடுக்கிறேன்.  என தெரிவித்துள்ளார்.