Breaking News

2017க்கான உலக கடவுச்சீட்டு தரப்படுத்தலில் இலங்கை 92வது இடம் !

2017ம் ஆண்டுக்கான உலக கடவுச்சீட்டு தரப்படுத்தலில் இலங்கைக்கும் பங்களதேஷுக்கும் 92வது இடம் கிடைத்துள்ளது.குறித்த தரப்படுத்தலில் ஜெர்மனி தொடர்ந்தும் 1ம் இடத்தை பிடித்த்துள்ளதுடன் இத்தரப்படுத்தல்  விசா இல்லாது பயணிக்கக்கூடிய நாடுகள் மற்றும் வருகையின் போது விசா வழங்கும் முறை போன்ற பல விடயங்களைக் கருத்திற்கொண்டே இத்தரப்படுத்தல் முன்னெடுக்கப்பட்டதாகவும் இதில் இலங்கை 92வது இடத்திலும் தென் சூடான், எத்தியோப்பியா 93வது இடத்திலும் சோமாலியா 94வது இடத்தையும் வகிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.