Breaking News

விழிப்புணர்வு அற்றவர்களுக்கான உலக கிண்ண இருபதுக்கு இருபது கிரிகெட் போட்டியில் சாதனை படைத்த மட்டகளப்பு மாணவன்.

இந்தியாவில் பெங்குலூர் சின்னசாமி மைதானத்தில் இடம்பெற்ற விழிப்புணர்வு அற்றவர்களுக்கான உலக கிண்ண இருபதுக்கு இருபது கிரிகெட் போட்டியில்  உலக நாடுகளில் இருந்து கலந்து கொண்ட  12 நாடுகளில்  இலங்கை நாட்டை பிரதிநிதித்துவப் படுத்தி வடக்கு-கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து  கலந்துகொண்ட கல்லடி உப்போடை சிவானந்தா தேசிய பாடசாலை  மாணவனும் கல்லடி உப்போடை தரிசனம் நிறுவக மாணவனுமான மோகன்ராஜை  கௌரவிக்கும் நிகழ்வு  சிவானந்தா தேசிய பாடசாலை  அதிபர் தலைமையில் . பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது

இவர் பெற்றுக்கொண்ட  சாதனைகள்  மூலம் இலங்கை நாட்டுக்கும் , கிழக்கு மாகாணத்திற்கும் ,  மட்டக்களப்பு  மாவட்டத்திற்கும்  மற்றும் அவர் கல்வி கற்கின்ற பாடசாலைக்கும் கிடைத்த பெருமையினை சிறப்பிக்கும் முகமாக   மட்டக்களப்பு உதயம் விழிப்புணர்வு அற்ற சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு  நடைபெற்றது

மட்டக்களப்பு கல்லடி சிவானந்தா தேசிய பாடசாலை  மண்டபத்தில் நடைபெற்ற கௌரவிப்பு நிகழ்வில் பிரதம விருந்தினராக மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் கே .குகநாதன் ,அதிதிகளாக உதயம் விழிப்புணர்வு அற்ற சங்கத்தின் பிரதம ஆலோசகர் , மாவட்ட  சமூக சேவை உத்தியோகத்தர் எஸ் .அருள்மொழி ,மாவட்ட விசேட கல்விப் பணிப்பாளரும் , தரிசனம் பாடசாலை தலைவருமான , எம் . தயானந்தன் ,பிளியன்ட் விழிப்புணர்வு பயிற்றுவிப்பாளரும், கிரான் சமூக சேவை உத்தியோகத்தர் விநாயகமூர்த்தி மற்றும் ஆசிரியர்கள் , மாணவர்கள்  ஆகியோர் கலந்துகொண்டனர் (லியோன்)