Breaking News

2017 மகா சிவராத்திரி விழா- மட்டு-கிரான்குளத்தில்-படங்கள்.

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேச செயலகமும்,இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களமும்,கிரான்குளம் இந்து இளைஞர் மன்ற அறநெறி பாடசாலையும் இணைந்து நடாத்திய 2017 மகா சிவராத்திரி விழா 24 நேற்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு கிரான்குளம் ஸ்ரீ கணபதிப் பிள்ளையார் ஆலய முன்றலில் இடம்பெற்றது.

ஆரையம்பதி பிரதேச செயலாளர் திருமதி சத்தியானந்தி நமசிவாயம் தலைமையில் இடம்பெற்ற மேற்படி மகா சிவராத்திரி விழாவில் மாவட்ட கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.குணநாயகம்,பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் கே.குருநாதபிள்ளை உட்பட பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர்கள்,கிராம உத்தியோகத்தர்கள்,அறநெறிப் பாடசாலை ஆசிரியர்கள்,மாணவர்கள்,ஆலய நிர்வாகத்தினர்கள்,பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது அறநெறி பாடசாலை மாணவர்களின் ஆக்கத்திறனை வெளிக்கொணரும் முகமாக மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தினால் 23-02-2017 நேற்று முன்தினம் மட்டு-கிரான்குளம் விநாயகர் மகா வித்தியாலயத்தில் நடாத்தப்பட்ட போட்டிகளுக்கான பரிசில்கள் ஆரையம்பதி பிரதேச செயலாளர் திருமதி சத்தியானந்தி நமசிவாயம், மாவட்ட கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.குணநாயகம் ஆகியோரினால் உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டது.

இங்கு மகா சிவராத்திரி விழா தொடர்பான சிறப்புரையை அறநெறிப் பாடசாலை ஆசிரியை ஒருவரினால் நிகழ்த்தப்பட்டது.

குறித்த மகா சிவராத்திரி விழாவில் இந்து இளைஞர் மன்ற அறநெறி பாடசாலை மாணவ,மாணவிகளின் ஆற்றல்களை பிரதிபலிக்கும் பல்வேறு கலை நிகழ்வுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.