Breaking News

இன்றைய ராசிபலன்-08.02.17

மேஷம்

குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். உறவினர்கள் பாராட்டும்படி நடந்துக் கொள்வீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். வெற்றி பெறும் நாள்.


ரிஷபம்

கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். தோற்றப் பொலிவுக் கூடும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். நன்மை கிட்டும் நாள்.


மிதுனம்

ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் உங்களை அறியாமலேயே தாழ்வு மனப்பான்மை தலைத் தூக்கும். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும். உத்யோகத்தில் அதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர்கள். நாவடக்கம் தேவைப்படும் நாள்.


கடகம்

கணவன்-மனைவிக்குள் அனுசரித்துப்போவது நல்லது. பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். உறவினர், நண்பர்கள் உதவி கேட்டு தொந்தரவு தருவார்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களால் பிரச்சனைகள் வரக்கூடும். உத்யோகத்தில் மறைமுகத் தொந்தரவு வந்து நீங்கும். போராடி வெல்லும் நாள்.


சிம்மம்

குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். இனிமையான நாள்.


கன்னி

எதையும் சாதிக்கும் துணிச்சல் வரும். உடன்பிறந்தவர்களின் பிரச்னையை தீர்த்து வைப்பீர்கள். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களைத் தேடி வருவார். புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.


துலாம்

குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். உறவினர்களால் நன்மை உண்டு. புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் புதுத் தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள். புதிய பாதை தெரியும் நாள்.


விருச்சிகம்

சந்திராஷ்டமம் தொடர்வதால் ஒருவித படபடப்பு வந்து செல்லும். குடும்பத்தில் பல விஷயங்களையும் நீங்கள் பார்க்க வேண்டி வரும். சிறுசிறு அவமானம் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைவார்கள். உத்யோகத்தில் உங்களைப் பற்றி வதந்திகள் வரும். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.


தனுசு

பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். மனைவி வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வாகனத்தை சரி செய்வீர்கள். பயணங்கள் திருப்திகரமாக அமையும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். அலுவலகத்தில் அமைதி நிலவும். திறமைகள் வெளிப்படும் நாள். 


மகரம்

குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். விருந்தினர் வருகை அதிகரிக்கும். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பார்கள். அமோகமான நாள்.


கும்பம்

குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துக் கொள்வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். புதுத் தொழில் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார். புதுமை படைக்கும் நாள். 


மீனம்

திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.