Breaking News

20 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணையும் பிரகாஷ் ராஜ் !

இருவர்' படத்தில் இணைந்து நடித்த மோகன்லால், பிரகாஷ் ராஜ் 20 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்து மலையாள படம் ஒன்றில் நடிக்க உள்ளனர்.

மணிரத்னம் இயக்கத்தில் 20 வருடங்களுக்கு முன்னர் வெளியான படம் `இருவர்'. மோகன்லால், பிரகாஷ் ராஜ், நாசர், ஐஸ்வர்யா  ராய், தபு, கௌதமி உள்ளிட்ட பலரும் நடித்து அரசியல் பின்னணியில் உருவாகிய இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை  பெற்றது. 

இந்நிலையில். மோகன்லால்-பிரகாஷ்ராஜ் இணைந்து மலையாளத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர். ஒடியன்' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஸ்ரீகுமார் இயக்குகிறார். இப்படத்தில் மோகன்லாலுக்கு வில்லனாக பிரகாஷ் ராஜ்  நடிக்க உள்ளார்.